நேற்று இரவிலிருந்து நுட்ப வலைப்பதிவுகளில் பரபரப்பு தொற்றிக் கொண்டிருக்கிறது.

எல்லாம் ஆரக்கிள் செய்த புண்ணியம். வேறொரு விசியத்தில் கூகுளிடம் பட்ட அடிக்கு பதிலாக, ஆண்ட்ராய்டுக்கு எதிராக வழக்கு ஒன்றைத் தொடர்ந்து கூகுளைப் பணியவைக்கப் பார்க்கிறது.

தன் வசம் உள்ள ஜாவா காப்புரிமைகளை வேண்டும் என்றே பலமுறை மீறி வந்துள்ளதாகவும், அதற்கான தகுந்த பதிலையும் மேற்கொண்டு அதுபோன்ற காரியங்களைத் தொடரக்கூடாது என்றும் ஆரக்கிள் வழக்கைத் தொடர்ந்து சிலிகான் வேலியில் தீயைக் கொழுத்திப் போட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு செயலிகள் கட்டமைப்பும் பயன்பாடுகளும் அதிகரித்துவரும் இந்தக் காலகட்டத்தில் பெரிய முதலைகளுக்கிடையேயான இந்த மோதல் முக்கியமானதாகப் படுகிறது. ஜாவாவிற்கு என பல காப்புரிமைகளை சன் மைக்ரோசிஸ்டம்ஸ் வைத்திருந்தது. அதோடு சுதந்திர செயலிகள் கட்டமைப்பிற்கு ஆதரவாகவும் நடந்து கொண்டது. ஜாவாவின் மூலம் பணம் செய்யவில்லை என்ற விமர்சனம் கூட சன் மைக்ரோ மீது இருந்தது. இவ்வளவு ஏன். ஜாவா வாழும். சன் மைக்ரோ அல்ல என்று விளையாட்டாகக் கூறுவார்கள்.

கருவிகளுக்கான மென்பொருள் பயன்பாட்டில் தொடங்கி, இயங்குதளம் அனைத்திலும் இயங்கும் வண்ணம் செயலிகள் செய்ததால் ஜாவாவின் பயன்பாடு அதிகரித்தது. இன்று கருவிகள், கணினியில் ஓடும் செயலிகள், இணையப் பயன்பாட்டுக்கான சேவிகள்.. சாதாரண பதிப்பு, எண்டர்பிரைஸ் பதிப்பு கருவிகளுக்கான பதிப்பு என்று ஜாவாவின் சந்தைப் பங்களிப்பு இன்றியமையாததாக மாறிய நிலையில் ஆரக்கிள் வசம் கை மாறியது. (ஆரக்கிள் அப்போது வெப்லாஜிக், சன்மைக்ரோ, மைசீகொல் என்று அனைத்தையும் வாங்கிக் குவித்தது நினைவிருக்கலாம்)

ஆண்ட்ராய்டு சமீப காலமாக சந்தையை சூடு பிடிக்க வைத்துள்ளது. அதோடு பெரிய மொபைல் போன் கருவி செய்யும் HTC, மோட்டரோலா போன்றவர்களுடன் இணைந்து ஒரு தர நிர்ணய அமைப்பினை உருவாக்கி ஒருங்கிணைக்கிறது அண்ட்ராய்டு. விளைவு சந்தையில் குறிப்பிட்ட அளவை ஆண்ட்ராய்டு கவ்வியது. இன்னும் ஓரிரண்டு ஆண்டுகளில் 5 ஸ்மார்ட் போன்களில் ஒன்று ஆண்ட்ராய்டாக இருக்கும் என்று கணக்கிடுகிறார்கள். அதோடு ஸ்மார்ட் போன்களுக்கான இயங்குதளங்களில் பிளாக்பெரிக்கு அடுத்தபடியாக இப்பவே இடம் பிடித்துள்ளது.

ஜாவாவை கம்ப்பைல் செய்ய தல்விக் (dalwik) என்கிற விர்ச்சுவல் மெசினை கூகுள் பயன்படுத்துகிறது. தல்விக்-ஐ ஜாவாவின் ‘clean room’ கட்டமைப்பு என்று சொல்லும் கூகுளின் வாதத்தை மறுத்து தல்விக்கில் தங்களது காப்புரிமைகள் மீறப்பட்டுள்ளன என்று ஆரக்கிள் நீதிமன்றத்தை நாடியுள்ளது.

தங்கள் காப்புரிமையை மீறுவதாக நிறுவனங்கள் போர்க்கொடி தூக்குகின்றன. மைக்ரோசாப்ட்.. இப்போது ஆரக்கிள். ஆரக்கிளின் நோக்கம் கூகுளுக்கு சூடு போடுவது மட்டுமன்றி ஆண்ட்ராய்டுக்கு முட்டுக்கட்டை போடுவதும்தான். அத்தோடு ஸ்மார்ட்போன் சந்தையில் கூகுளின் வெற்றி இவர்களை கலங்க வைத்துள்ளது, இது தொடர்ந்தால் ஜாவாவிற்குப் போட்டியாக தல்விக் மாறலாம்!!

திறந்த நிரல் எழுதுபவர்கள் (GNU மற்றும் NON GNU) இணையத்தை மேம்படுத்தி அதை வாழ்விற்கு உதவும் வண்ணம் வடிவமைத்துள்ளனர். கூகுள் மீதும் திறந்த நிரல் சமுதாயத்தின் மீதும் அந்த அடிப்படையற்ற வழக்கைத் தொடர்ந்துள்ளது என்று கூகுள் கருத்து தெரிவித்தள்ளது.

எல்லாவற்றையும் விட கூகுளின் சிஈஓ எரிக் ஸ்கிமிட் ஒரு ஜாவா ஆசாமி. சன் மைக்ரோசில் ஜாவா கட்டமைப்பு அணியை நடத்திவந்த அவர் 2001ல் கூகுளில் இணைந்தார். ஜாவாவின் பயன்பாடுகள் பற்றி மற்றவர்களை விட அதிகம் அறிந்தவர் என்பது சுவையான செய்தி.

ஆண்ட்ராய்டுக்கு ஜாவா முக்கியம். எனவே இந்த வழக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தெரிகிறது. என்ன வருகிறதென்று பார்க்கலாம்.

Pandian எழுதியவை | ஆகஸ்ட் 5, 2010

Android Market

Android Market

Android Market

ஆண்ட்ராய்டு மார்கெட்டில் என்ன கிடைக்கும்?

செயலிகளைச் (apps) சேர்த்து வைத்து ஆண்ட்ராய்டு கருவிகளுக்கு தகவறக்கம் செய்து கொள்ள கூகுள் நிறுவனத்தாரால் ஏற்படுத்தப்பட்ட ஒரு செயலிதான் ஆண்ட்ராய்டு மார்க்கெட். ஐபோனுக்கு ஆப்பிள் நிறுவனம் மார்க்கெட் வசதி ஏற்படுத்தியது போன்றது. இவற்றில் இலவச செயலிகள், அதிகம் பணம் சம்பாதிக்கும் செயலிகள் இன்னும் இத்யாதிகளைக் காணலாம்.

ஒரு செயலியைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் அதன் விபரம், பயனாளர்கள் அதற்குக் கொடுக்கும் தரமதிப்பீடு, அதனைப் பற்றிய விமர்சனங்களைக் காண இயலும். ஆக பயனாளர்களைக் கவரும் பட்சத்தில் ஒரு செயலி விளம்பரம் பெறுவது மட்டுமன்றி அதிக மதிப்பையும் பணத்தையும் ஈட்டுகிறது.

உதாரணமாக PDF படிக்க நான் செயலிகள் தேடுகின்றேன்.

Search

Search

search results

search results

பீம் ரீடர்னா என்னா?

App details

App details

ஓஹோ

பயனாளர்கள் என்ன சொல்லி இருக்காங்க

comments and rating

comments and rating

ம்ம். பரவாயில்ல..

நிறுவலாமா? கீழ உள்ள install பொத்தானை அழுத்த வேண்டியதுதான்!

Pandian எழுதியவை | ஆகஸ்ட் 5, 2010

How to connect Android phone with PC for browsing – USB tethering

இணையப் பயன்பாடு அதிகரித்து வரும் இந்த கால கட்டத்தில் கம்பியில்லா இணைப்புகளும் பெருகிவிட்டன. ஒவ்வொரு நிறுவனத்திலும் கம்பியற்ற இணைய கருவிகள் மூலம் அதிக வேகத்தில் இணையம் தரப்படுகின்றது. மறுபுறம் மூன்றாம் தலைமுறையான 3G வந்துள்ளது. நாளது தேதியில் BSNL மட்டுமே இந்த சேவையைத் தந்து வந்தாலும் இந்த வருட இறுதிக்குள் அனைத்து நிறுவனங்களும் 3G சேவையைத் தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புள்ளி விபரப்படி தற்போது இருக்கும் சந்தாதாரர்களில் 10 சதவீதம் பேர் மூன்றாம் தலைமுறைக்கு மாறுவார்கள் என்று கூறுகிறார்கள். பெரிதாக விளம்பரப்படுத்தப்படும் முகத்தில் முகம் பார்க்கலாம் என்கிற கோஷம் என்னைக் கவரவில்லை. ஆனால் இணையம் ஒட்டிய அதன் பயன்பாடு எனக்குப் பெரிதாகத் தெரிகிறது. தற்போதே சிட்டி வங்கி உள்ளிட்டவர்கள் மொபைலுக்கு என்று செயலிகள் கொடுக்கிறார்கள். பிரபலமான இணைய தளங்கள் கைபேசிக்கு என்று தனியே பதிப்பு தருகிறார்கள். ஆக, 3Gயின் மூலம் உலகை உள்ளங்கைக்குள் அடக்க முடிகிறது.

இந்த நிலையில் ஆண்ட்ராய்டு கைபேசி பயன்படுத்தி தங்கள் கணினி அல்லது மடிக்கணினி மூலமாக இணையத்தில் எப்படி இணைவது என்பதைப் பற்றிய பதிவு இது.

சில கைபேசிகளில் USB அல்லது ப்ளூடூத் வழி இணைக்க வசதி தருகிறார்கள். சிலர் தருவதில்லை. இவ்வளவு உபயோகமான ஒன்றை ஏன் தராமல் மறைக்கிறார்கள் என்று எனக்குப் புரியவில்லை.  அப்படிப்பட்ட கைபேசிகளை உபயோகிக்க USB Tethering செயலிகள் தருகிறார்கள். சில பல செயலிகள் வந்தாலும், அவற்றில் பல root அனுமதி எனப்படும் உயரிய அனுமதியைக் கேட்கின்றன. அதைப் பெறுவதில் உள்ள சிக்கல்கள் போக, root அனுமதி கொண்டு செயல்படுவது பாதுகாப்பு அல்ல. அந்த அனுமதி கொண்டு உங்கள் கைபேசியில் உள்ள விபரங்களை அழிக்கலாம். ஏன் நினைவக அட்டையைக் கூட அழிக்கலாம். ஒரு சில செயலிகள் root அனுமதி இல்லாமல் இயங்குகின்றன. எ.கா. PDA net, EasyTether.

USB tethering பற்றி கீழ்காணும் சுட்டிகளில் விளக்கி இருக்கிறேன்.

விண்டோஸ் விஸ்தா – http://foxbrush.wordpress.com/2010/07/31/usb-tethering-between-vista-and-android-phone/

உபுந்து லினக்ஸ் – http://foxbrush.wordpress.com/2010/08/01/usb-tethering-between-ubuntu-and-android-phone/

USB connection using EasyTether

USB connection using EasyTether

இலவசமாகத் தருகையில் பாதுகாப்பான தளங்களை (https) அணுக தடைவிதிக்கிறார்கள் :( கொடுமை. ம்ம். வேறொரு செயலி கிடைக்கும் வரை இதை வைத்து ஒப்பேற்றலாம். என்ன சொல்றீங்க!

Pandian எழுதியவை | ஆகஸ்ட் 4, 2010

Tamil in Android

ஆண்ட்ராய்டில் தமிழ்

வருமா? வராதா?

தமிழ் மக்கள் மட்டுமல்ல இந்தியாவில் ஆண்ட்ராய்டு வாங்கும் பெரும்பாலான மக்கள் கேட்பது இந்தக் கேள்விதான். தமிழ் வருமா? மலையாளம் வருமா? இந்தி வருமா?

தற்போதைக்கு (பதிப்பு 2.2 வந்துள்ள நிலையில்) வராது!

காரணம், யூனிக்ஸ் இயங்கு தளங்களில் பாங்கோ (pango) என்கிற நூலகம் தமிழ் உட்பட இந்திய மொழிகளைக் கையாளுகிறது (complex scripts). அந்த நூலகம் தற்போதைய பதிப்புகளில் இணைக்கப்படவில்லை. ஆனால் மகிழ்ச்சி அளிக்கும் விசியம். கூடிய சீக்கிரம் இந்த வசதி வந்துவிடும் என்கிறார்கள். வந்தால் மகிழ்ச்சிதானே.

ஏனைய கைபேசிகளைப் போல் நாமும் தற்போதைக்கு ஓப்பரா மினி உலாவியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Tamil in Opera Mini

Tamil in Opera Mini

Pandian எழுதியவை | ஆகஸ்ட் 4, 2010

Why Android?

ஆண்ட்ராய்டு இயங்குதளம் பற்றிய தமிழ் பதிவிற்கு தங்களை வரவேற்கிறேன்.

வெளியிட்ட வெகு சீக்கிரத்திலேயே சந்தையில் தனக்கென்று அதிகமான பங்கினைப் பெற்ற இந்த சிறு பொறிகளுக்கான இயங்குளம், எதிர்காலத்தில் இன்னும் பரவலாகப் பயன்படுத்தப்படப் போகிறது. குறுகிய காலகட்டத்தில் தன் போட்டியாளர்களை பின்னுக்குத் தள்ளி உள்ளது ஆண்ட்ராய்டு.

அதிகம் கதை பேசப் போவதில்லை. இந்த வலைப்பதிவு ஆண்ட்ராய்டு பற்றிய துணுக்குகளையும், ஆண்ட்ராய்டு செயலிகளைப் பற்றிய அறிமுகங்களையும், ஆண்ட்ராய்டு செயலிகளை செய்யும் முறைகள் பற்றியும் எழுதப்படும். நேரம் காரணமாக பதிவுகள் தாமதமாகலாம். பொறுத்தருளவும்.

ஆண்ட்ராய்டு என்பது என்ன?

கைபேசி, tablet PC மற்றும் இணைய கணினிகளுக்கான ஒரு இயங்குதளம். யூனிக்ஸ் அடிப்படையாகக் கொண்டு ஆண்ட்ராய்டு நிறுவனத்தால் துவங்கப்பட்ட இந்த இயங்குதளம் பின்னாளில் கூகுள் நிறுவனத்திற்குக் கைமாறியது. அதனாலும் சுதந்திர கருவிகளின் கூட்டணியாலும் (open handset alliance) வெகு விரைவில் தரமான இயங்குதளமாக உருப்பெற்று சந்தைக்கு வந்தது.

கூகுள் நிறுவனத்தில் வெளியீடு என்பதால் அவர்களின் தயாரிப்புகளான மடல், நாள்காட்டி, அரட்டை, ஆர்குட் போன்றவற்றைக் கையாளுவதில் திறமை வாய்ந்ததாக உள்ளது. தவிறவும் சக இயங்குதளங்களை விட வேகம், கையாளும் திறனும் குறிப்பிடத்தகுந்த அளவில் உள்ளது. இந்த இயங்குதளத்திற்கான செயலிகள் (apps) எழுதுவோர் லினக்ஸ் சமுதாயத்தைப் போல பரவி உள்ளனர். அதனால் வெகு சீக்கிரத்தில் நிறைய செயலிகள் உருவாகின்றன.

இந்த இயங்குதளம் அப்பாச்சி உரிமத்தின் கீழ் வெளிப்படையாக (சில அடிப்படைகள் தவிற) வெளியிடப்படுகின்றன.

மார்க்கெட்டில் சூடு பிடிப்பதால், ஆண்ட்ராய்டு செயலிகள் எழுதுவோருக்கு வரவேற்பும் அதிகமாக உள்ளன.

ப்ளாக்பெரிக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் சந்தை மதிப்பை வெகு சீக்கிரத்தில் பெற்றுள்ளது ஆண்ட்ராய்டு.

1.5 பதிப்பில் அறிமுகமான ஆண்ட்ராய்டு தற்போது 2.2 வெளியிட்டுள்ளது. 3.0ஆம் பதிப்பு ஆய்வகத்தில் உள்ளது.

Pandian எழுதியவை | ஆகஸ்ட் 4, 2010

Hello world!

Welcome to WordPress.com. This is your first post. Edit or delete it and start blogging!

வகைகள்

Follow

Get every new post delivered to your Inbox.